/tamil-ie/media/media_files/uploads/2023/03/fixed-deposit-5.webp)
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, திருத்தப்பட்ட FD விகிதங்கள் வங்கித் துறை முழுவதும் அதிக விகிதங்களை வழங்குகின்றன.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (NESFB) அதன் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை 9.75% ஆக உயர்த்தியுள்ளது. இந்த எஃப்.டி வட்டி விகிதங்கள் நாட்டின் மிக உயர்ந்த வட்டி விகிதமாகும். இது தொடர்பாக, வங்கியின் கூற்றுப்படி, இந்த 50 அடிப்படை புள்ளி அதிகரிப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க வருவாயை வழங்க உறுதி கூறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வட்டி விகிதங்கள்
வ.எண் | ஃபிக்ஸட் டெபாசிட் | ரூ.5 கோடிவரை முதலீடு சாதாரண குடிமக்கள் வட்டி விகிதம் | ரூ.5 கோடிவரை முதலீடு மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம் |
01 | 181-365 நாள்கள் | 7.25% | 7.75% |
02 | 366-545 நாள்கள் | 9.00% | 9.50% |
03 | 546-1111 நாள்கள் | 9.25% | 9.75% |
04 | 112-1825 நாள்கள் | 8.25% | 8.75% |
05 | 1826-3650 நாள்கள் | 6.50% | 7.00% |
வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் குமார் கல்ரா, “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாடுகள் இரட்டை நோக்கத்தைக் கொண்டுள்ளன: வருவாயை அதிகரிப்பதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் செல்வத்தை மேம்படுத்த அவை உதவுகின்றன. மேலும், அவை வங்கி இருப்பு மற்றும் அதன் ஒட்டுமொத்த வைப்புச் செலவை மேம்படுத்தவும் உதவுகின்றன.
வட்டி விகிதங்களை மாற்றியமைப்பதன் மூலம், வள நிர்வாகத்தில் திறம்பட செயல்படும் அதே வேளையில், தனது வாடிக்கையாளர்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த வருமானத்தை வழங்க முடியும் என்பதை வங்கி உறுதி செய்கிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.