பிக்ஸிட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி; எந்த வங்கினு பாருங்க!

மூத்தக் குடிமக்களின் பிக்ஸிட் டெபாசிட்களுக்கு 7.50% வரை வட்டி வழங்கப்படுகிறது

Senior citizens fixed deposits earn 7.5% interest from this bank: பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்வதற்கு ஃபிக்ஸிட் டெபாசிட்கள் ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. ஃபிக்ஸிட் டெபாசிட்களைப் பொறுத்தவரை வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி வங்கிகள் நல்ல வட்டியை அளிக்கின்றன. நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, 7 சதவீதத்திற்கு மேல் வட்டி விகிதத்தை விரும்பினால், உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி உங்களுக்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்களின் ஃபிக்ஸ்ட் டெபாசிட்கள் (FD) மீது 7.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 31 முதல் அமலுக்கு வந்துள்ளன. நீங்கள் விரும்பினால், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இது பற்றிய முழுமையான தகவல்களைப் பெறலாம்.

குறிப்பிடத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு 990 நாட்களுக்குள் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. 19 மாதங்கள் மற்றும் 1 நாள் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 7.35 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் அல்லாதவர்கள் பற்றி பேசுகையில், வங்கி அவர்களுக்கு 990 நாட்களுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது தவிர, 19 மாதங்கள் மற்றும் 1 நாளுக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் 7.5 சதவீத வட்டியை திரும்பப் பார்த்தால், ரூ.1 லட்சத்தில் ரூ.1.22 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, ஒரு மூத்த குடிமகன் 990 நாட்களுக்கு ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் அவருக்கு ரூ.1,22,314 கிடைக்கும்.

இதேபோல், சேமிப்புக் கணக்கிலும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வசதி அளிக்கப்படுகிறது. 24 மாதங்களுக்கான டெபாசிட் தொகைக்கு 7.35 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேசமயம் 12 மாத டெபாசிட் தொகைக்கு 7.25 சதவீதம் வட்டி கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Senior citizens fixed deposits earn 7 5 interest from this bank

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com