மூத்த குடிமக்களுக்கு ரூ.10,000; விரைவில் அரசு கொண்டு வரப்போகும் சட்டம் என்ன தெரியுமா?

இந்த மசோதா நீண்ட காலமாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் மீண்டும் முதலில் இருந்து இந்த மசோதா குறித்து விவாதிக்க விரும்புகிறது மத்திய அரசு.

இந்த மசோதா நீண்ட காலமாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் மீண்டும் முதலில் இருந்து இந்த மசோதா குறித்து விவாதிக்க விரும்புகிறது மத்திய அரசு.

author-image
WebDesk
New Update
senior citizens, maintenance

Senior citizens personal finance news : மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல உதவி திட்டங்களை தொடர்ந்து தீட்டி வருகிறது மத்திய அரசு. இதற்கிடையில், பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் பராமரிப்பிற்காக மத்திய அரசு ஒரு புதிய விதியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்தம்) மசோதா, 2019 குறித்த முடிவு, திங்கள் கிழமை துவங்கிய மழைக்காக கூட்டத் தொடரில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த மசோதா நீண்ட காலமாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் மீண்டும் முதலில் இருந்து இந்த மசோதா குறித்து விவாதிக்க விரும்புகிறது மத்திய அரசு.

2019 டிசம்பரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலன் மசோதாவை அமைச்சரவை நிறைவேற்றியது. இந்த மசோதாவின் நோக்கம் பெற்றோர்களையும் மூத்த குடிமக்களையும் முதியோர் இல்லங்களில் அடைப்பதைத் தடுப்பதாகும். இந்த மசோதாவில், மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலனுடன் அவர்களின் தேவைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுள்ளன. பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த மசோதா, நாட்டில் நிலவும் கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக இந்த மசோதாவில் குழந்தைகள், பேரக்குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வயதானவர்களின் கண்காணிப்பிற்காக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: