Senior Citizens Savings Scheme | ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் நிதி பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அந்த வகையில், முதுமை காலத்தில், மூத்த குடிமக்களுக்கு உத்தரவாதமான வருமானம் தரும் திட்டங்கள் கைகொடுக்கின்றன.
இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கு வருமானத்தை வழங்கும் நோக்கத்துடன், தபால் அலுவலகம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கை (SCSS) இயக்கிவருகிறது.
இதில், ஒருவர் சரியான நேரத்தில் முதலீடு செய்தால், அந்த முதலீட்டின் வட்டியிலிருந்து வருமானத்தைப் பெறலாம்.
அதிகப்பட்ச முதலீடு
இந்தத் திட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.1,000ல் திட்டத்தை தொடங்கலாம்.
மேலும் திட்டத்தின் முதலீடு ரூ.1,000 மடங்குகளில் இருத்தல் வேண்டும். கணக்கின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மேலும், கணக்கை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.30 லட்சம் ஆகும்.
வரி சலுகைகள்
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ஒருவர் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரிச் சலுகைகளைப் பெறலாம்.
எஸ்.சி.எஸ்.எஸ் கால்குலேட்டர்
இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் முதிர்ச்சியின்போது ரூ.14.10 லட்சமும், ரூ.20 லட்சம் முதலீடு செய்தால் ரூ.28.20 லட்சமும், ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ரூ.42.30 லட்சமும் வருமானம் ஆக கிடைக்கும்.
வரிக்கு வட்டி
ஒரு நிதியாண்டில் அனைத்து SCSS கணக்குகளிலும் உள்ள மொத்த வட்டி ரூ.50,000க்கு மேல் இருந்தால் SCSS இலிருந்து வரும் வட்டி வருவாய்க்கு வரி விதிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"