Senior Citizens Savings Scheme | SCSS | மூத்த குடிமக்கள் சேமிப்பு (நான்காவது திருத்தம்) திட்டம், 2023 மூலம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்தத் திருத்தங்கள் நவ.7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மேலும் இந்தத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான மாற்றங்களின் சுருக்கம் பின்வருமாறு.
முன்கூட்டிய மூடல்
புதிய விதிகளின்படி, கணக்கு நீட்டிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் காலாவதியாகும் முன் கணக்கு மூடப்பட்டால், வைப்புத்தொகையில் ஒரு சதவீதத்திற்கு சமமான தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை முதலீட்டாளருக்கு செலுத்தப்படும்.
முதிர்ச்சி
கணக்குத் திறக்கும் போது செய்யப்பட்ட வைப்புத் தொகையானது, ஐந்து வருடங்கள் முடிவடைந்த பிறகு அல்லது ஒவ்வொரு பிளாக் காலத்தின் மூன்று வருட காலாவதியின் பின்னும் செலுத்தப்படும்.
கணக்கு நீட்டிப்பு
கணக்கு வைத்திருப்பவர் SCSS கணக்கை முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் அல்லது மூன்று வருடங்கள் ஒவ்வொரு பிளாக் காலம் முடிவடையும் தேதியிலிருந்து படிவம்-4 இல் விண்ணப்பம் செய்வதன் மூலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கலாம்.
முதன்மை கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு கூட்டு கணக்கு
கூட்டுக் கணக்காக இருந்தால் அல்லது மனைவி மட்டுமே நாமினியாக இருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், வாழ்க்கைத் துணை கணக்கு அலுவலகத்திற்கு விண்ணப்பித்து கணக்கைத் தொடரலாம்.
நீட்டிப்பு மீதான வட்டி
ஒரு கணக்கு முதிர்வுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்டால், அத்தகைய கணக்கில் வைப்புத்தொகை முதிர்வு தேதி அல்லது நீட்டிக்கப்பட்ட முதிர்வு தேதியில் திட்டத்திற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி பெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“