scorecardresearch

சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு: ஜொலிக்கும் டாடா, தடுமாறும் அதானி!

திங்கள்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன.

Share Market News Today June 1 2023
இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து காணப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வில் வணிகத்தை தொடர்கின்றன. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்படுகிறது. முன்னதாக, ஏப்ரல் 2023 இல் நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் 4.7% ஆக குறையும் என்ற செய்தியை சந்தைகள் உற்சாகப்படுத்தின.

மேலும், உலகளாவிய குறிப்புகள் கலவையாகவே உள்ளன, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வரும் குறிப்புகள் எதிர்மறையாக இல்லை. தொடர்ந்து, அமெரிக்க டாலர் விலை உயர்வு காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் சரிந்து காணப்படுகிறது.

இதனால், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹60,820 ஆக குறைந்தது. எனினும், சர்வதேச சந்தையில் மஞ்சள் உலோகத்தின் (தங்கம்) விலை 0.18 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 2014.50 டாலராக உள்ளது.

இதற்கிடையில் ஆரம்ப வர்த்தகத்தில் அதானி எண்டர்டெயின்ட் மற்றும் சிப்லா நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளன. டாடா மோட்டர்ஸ் விலை உயர்ந்து காணப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sensex adds 200 pts tata motors shines