இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (செப்.21) பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டெண் 262.96 சரிந்து 59456.78 (0.44) எனவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீடு 97.9 சதவீதம் சரிந்து 17718 (0.55) எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவன பங்குகள் அதிகப்பட்சமாக 1 சதவீதம் வரை உயர்வை கண்டன. அதேநேரத்தில் அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல் நிறுவன பங்குகள் 3.85 சதவீதம் சரிவை கண்டன.
மும்பை பங்குச் சந்தையில், இந்துஸ்தான் யூனி லிவர் பங்குகள் 1.60 சதவீதமும், ஐடிசி பங்குகள் 1.59 சதவீதமும் உச்சம் கண்டன. மறுபுறம் பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேப், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
பி.எஸ்.இ.யில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. 50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையில் 13 பங்குகள் லாபத்திலும் மீதமுள்ள 37 பங்குகள் நஷ்டத்திலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil