scorecardresearch

அதானி பங்குகள் பலத்த அடி.. 8 சதவீதம் வரை சரிவு.!

மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், என்.டி.பி.சி மற்றும் விப்ரோ உள்ளிட்ட 4 பங்குகள் மட்டும் லாபத்தில் வணிகமாகின.

Markets Wrap 01 March 2023
இன்றைய வர்த்தகத்தில் கௌதம் அதானி நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் வரை லாபம் கண்டன.

திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் அதானி பங்குகள் கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை சரிவை கண்டன.
இன்றைய பங்கு வர்த்தக நிறைவில் இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 207 (1.21 சதவீதம்) புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 638.11 (1.11 சதவீதம்) புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், என்.டி.பி.சி மற்றும் விப்ரோ உள்ளிட்ட 4 பங்குகள் மட்டும் லாபத்தில் வணிகமாகின.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.சி.எல் டெக், இந்துஸ்தான் யூனிலிவர், இன்ஃபோசிஸ், ஐடிசி, மாருதி சுசூகி உள்ளிட்ட மீதமுள்ள பங்குகள் சரிந்தன.

இதில் அதிகப்பட்சமாக அதானி பங்குகள் 8 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. 50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையில், பார்தி ஏர்டெல், பிபிசிஎல், சிப்லா, கோல் இந்தியா, திவிஸ் லேப் ஆகிய பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
உச்சப்பட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் ரூ.298.45 (8.64 சதவீதம்) சரிந்து, ஒரு பங்கின் விலை ரூ.3157.30 ஆக உள்ளது. அதேபோல், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல் பங்குகளும் 4.42 சதவீதம் சரிந்து காணப்பட்டன.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஒரு சதவீதம் வரை சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sensex and nifty fall over 1pc on selling in banking shares