அமெரிக்க பெடரல் ரிசர்வ் செப்டம்பரில் சாத்தியமான விகிதக் குறைப்புக்கான சமிக்ஞையைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை அதிகப்படுத்தியதால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் உயர்ந்தன.
சென்செக்ஸ் 82,000 அளவைத் தாண்டி, நிஃப்டி 25,000 ஐத் தாண்டியது. பிஎஸ்இயின் 30-பங்கு சென்செக்ஸ் வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் முதல் முறையாக 82,000 ஐ கடந்தது.
சந்தைகள் ஏன் உயர்ந்தன?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் ஜூலை கூட்டத்தில் எட்டாவது முறையாக தொடர்ந்து 5.25-5.5 சதவீதமாக விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது.
இது குறித்து, ஜியோஜித் நிதிச் சேவையின் தலைமை முதலீட்டு வியூகவாதி வி கே விஜயகுமார், “ஃபெடரல் தலைவர் (ஜெரோம் பவல்) செப்டம்பர் மாதத்தில் சாத்தியமான விகிதக் குறைப்புக்கு சமிக்ஞை செய்வது உலகளாவிய பங்குச் சந்தைகளுக்கு சாதகமானது” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க
கோடக் மஹிந்திரா ஏ.எம்.சி.யின் தலைமை முதலீட்டு அதிகாரி தீபக் அகர்வால், “பணவீக்கம் தணிந்து, வேலை வளர்ச்சி குறைந்து வருவதால், மத்திய வங்கி செப்டம்பர் 2024 கொள்கையில் கடந்த 2 ஆண்டுகளில் செய்யப்பட்ட இறுக்கத்தை குறைக்கத் தொடங்கும்” என்றார்.
உள்நாட்டு பங்குகளில் எஃப்ஐஐகள் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர்?
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) தரவுகளின்படி, இந்த காலண்டர் ஆண்டில் இதுவரை எஃப்ஐஐகள் ரூ.35,566 கோடி உள்நாட்டு பங்குகளை வாங்கியுள்ளனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், எஃப்ஐஐகள் ரூ.26,565 கோடி மற்றும் 32,365 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“