இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் செவ்வாய்கிழமையன்று உயர்வில் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 126.21 புள்ளிகள் உயர்ந்து 61,294.00 ஆக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 35.10 புள்ளிகள் உயர்ந்து 18,232.55 ஆக நிலைபெற்றது. பெரும்பாலான பரந்த சந்தை குறியீடுகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 0.42%, நிஃப்டி மிட்கேப் 50 0.21%, நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 உயர்ந்தது. மேலும், 0.21% மற்றும் நிஃப்டி மொத்த சந்தை 0.23% உயர்ந்து முடிந்தது. துறைசார் குறியீடுகளில் நிஃப்டி வங்கி 0.58% உயர்ந்தது, நிஃப்டி ஐடி 0.76% உயர்ந்தது, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.38% சரிந்து காணப்பட்டது.
நிஃப்டி லாபம், நஷ்டம்
ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டைட்டன் மற்றும் டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி லாபத்தில் முதலிடத்தில் உள்ளன. அதே நேரம்,
ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பிரிட்டானியா, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.
சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்
பிஎஸ்இ சென்செக்ஸ் 126.21 புள்ளிகள் உயர்ந்து 61,294.00 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 35.10 புள்ளிகள் உயர்ந்து 18,232.55 ஆகவும் முடிவடைந்த நிலையில் உள்நாட்டு பங்கு குறியீடுகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
மேலும், நிஃப்டி வங்கி 0.51% உயர்கிறது, நிஃப்டி மெட்டல் 0.40% சரிந்தது.
NDTV பங்குகள் 1.6% உயர்வு
நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட் பங்குகள் 1.6% உயர்ந்து ரூ. 344.65 ஆக காணப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/