Stock Market Highlights : பங்கு சந்தை குறியீடுகள் முந்தைய வாரத்தில் புதிய உச்சத்தை எட்டின. அதன் பிறகு, திங்கள்கிழமை அமர்வில் மிகவும் மந்தமானதாக இருந்தது. முதலீட்டாளர்கள் முக்கிய உலகளாவிய மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகளுக்காகக் காத்திருந்தனர்.
நிஃப்டி அதிகபட்சமாக 0.29% குறைந்து 20,133.30 ஆக இருந்தது. சென்செக்ஸ் 240 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 67,596 புள்ளிகளில் முடிவடைந்தது.
எனினும் தேசிய பங்குச் சந்தையில் பவர் கிரிட், டைடான், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஹெச்டிஎஃப்சி லைஃப், பாரத் பெட்ரோலியம், என்டிபிசி லிமிட், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, நெஸ்லே உள்ளிட்ட பல்வேறு நிறுவன பங்குகள் லாபம் பார்த்தன. மும்பை பங்குச் சந்தையிலும் இந்தப் பங்குகள் லாபமாக வர்த்தகமாகின.
மறுபுறம் ஹிண்டல்கோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட், டாக்டர் ரெட்டி, அதானி எண்டர்பிரைசஸ், இன்போசிஸ் லிமிட், அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிட், டாடா ஸ்டீல், விப்ரோ லிமிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடாக் மகிந்திரா வங்கி, டெக் மகிந்திரா மற்றும் மாருதி சுசூகி உள்ளிட்ட பல்வேறு பங்குகள் சரிவை சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“