இந்தியப் பங்குச் சந்தைகள் வார நிறைவு நாளான இன்று (செப்.16) வீழ்ச்சியில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1093.22 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 346.55 புள்ளிகளும் வீழ்ச்சியுற்று வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இந்த நிலையில், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், இன்ஃபோசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்), நெஸ்லே இந்தியா, விப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஆர்ஐஎல், டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவன வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 2.45 சதவீதம் வரை நஷ்டமடைந்தன. இன்டஸ் இந்த் வங்கி (IndusInd Bank) மற்றும் ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
உலகலாவிய வணிகத்தில் ஏற்பட்ட சுணக்கமான குறியீடுகள் காரணமாக, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,093.22 புள்ளிகள் (1.82 சதவீதம்) சரிந்து 58,840.79 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 346.55 புள்ளிகள் (1.94 சதவீதம்) குறைந்து 17,530.85 ஆகவும் இன்று நிறைவுற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil