இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 155.21 புள்ளிகள் வீழ்ச்சியுற்று வர்த்தகமானது.
வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 155.21 (0.26 சதவீதம்) புள்ளிகள் சரிந்து 59,177.39 எனவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 37.25 (0.21 சதவீதம்) சரிந்து 17,621.75 எனவும் வர்த்தகமாகிறது.
அதிகப்பட்சமாக டெக் டாடா மகேந்திரா பங்குகள் 1.34 சதவீதம் வீழ்ச்சி கண்டன. தொடர்ந்து, நெஸ்லே இந்தியா, இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ் மற்றும் சன் பார்மா நிறுவன பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

மறுபுறம் டாடா ஸ்டீல், பவர்கிரிட், எஸ்பிஐ, எடிபிசி, இன்டஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் டைடான் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின்றன.
இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை (ஆக.11) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முக்கிய முதலீட்டாளர்களாக திகழ்ந்தனர். கிட்டத்தட்ட ரூ.2,298.08 கோடி அளவிலான பங்குகளை வாங்கியிருந்தனர்.
இதற்கிடையில், சர்வதேச எண்ணெய் பெஞ்ச் மார்க் பீப்பாய் ஒன்றுக்கு 0.40 சதவீதம் குறைந்து 99.20 அமெரிக்க டாலராக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil