Stock Market Today: திங்கள்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., சென்செக்ஸ் குறியீடு 59,141.23 என வர்த்தத்தை நிறைவு செய்தது. இது 300 புள்ளிகள் உயர்வாகும். அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 91.4 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில், 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 23 பங்குகள் லாபத்திலும் 7 பங்குகள் நஷ்டத்திலும் வணிகமாகின.
அந்த வகையில், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்.பி.ஐ., ஹெச்யூஎல், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் டாடா ஸ்டீல் , ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் அதிக நஷ்டத்தை சந்தித்தன. 50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையில் 35 பங்குகள் லாபம் கண்டன. மீதமுள்ள 15 பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.
தேசிய பங்குச் சந்தை
நிஃப்டியை பொறுத்தமட்டில், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்.பி.., லைப், ஹெச்யூஎல் பங்குகள் அதிக லாபத்திலும், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பிரிட்டானியா, பவர் கிரிட் பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை 1100 புள்ளிகள் வரை சரிந்தது. இந்நிலையில் ஆறுதலாக 300 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil