இந்தியப் பங்கு சந்தைகள் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (செப்.5) வர்த்தகத்தை உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 443 (0.8) சதவீதம் உயர்ந்து 59,246 எனவும் தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி 0.7 சதவீதம் வரை உயர்ந்து 17,665.80ஆகவும் நிறைவு செய்தன.
30 பட்டியலிடப்பட்ட பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 23 பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன. அந்தப் பங்குகள் சன் பார்மா, ஐடிசி, என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் ஆகியவை ஆகும்.
அதேநேரம் நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்யூஎல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.
பே.டி.எம், ரோஸர் பே உள்ளிட்ட நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிறுவனங்கள் சீன கடன் செயலி நிறுவனங்களுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதலே பேடிஎம் பங்குகள் சரியத் தொடங்கின.
இந்தப் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil