897 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. அதல பாதாளத்தில் வங்கி பங்குகள்

இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அந்த வங்கி பங்குகள் 7.33 சதவீதம் வரை சரிந்தன.

Today Nifty and Sensex 16 May 2023
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 16 மே 2023

திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவுற்றன. இந்நிலையில்,மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 897.28 புள்ளிகள் அல்லது 1.52 சதவீதம் குறைந்து 58,237.85 ஆகவும், தேசிய பங்குச் ச்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 1.49 சதவீதம் சரிந்து 258.60 புள்ளிகள் 17,154.30 ஆகவும் நிறைவு பெற்றது.

முன்னதாக மதியம் 2.45 மணியளவில், சென்செக்ஸ் 1004.02 புள்ளிகள் அல்லது 1.70 சதவீதம் சரிந்து 58,131.11 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 279.30 புள்ளிகள் அல்லது 1.6 சதவீதம் சரிந்து 17,133.60 ஆகவும் வர்த்தகமானது.
சிலிக்கான் வேலி வங்கி மூடலின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் இந்திய வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

இதனால், பொதுத்துறை வங்கியின் துறைசார் குறியீடு 2.87 சதவீதமும், தனியார் வங்கி 2.44 சதவீதம் சரிந்தும், நிஃப்டி வங்கி 2.27 சதவீதம் சரிந்தும் முடிவடைந்தன.
தொடர்ந்து, இந்தியா விக்ஸ், 20.89 சதவீதம் உயர்ந்ததைத் தவிர, அனைத்து சந்தை குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.

இந்த நிலையில், நிஃப்டி மைக்ரோகேப் 250 2.75 சதவீதம் சரிந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 50 2.26 சதவீதம் சரிந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 100 2.23 சதவீதம் சரிந்தது.
தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்த பிறகு, இன்டஸ் இந்த் வங்கி இன்று அதிக நஷ்டமடைந்தது.

மேலும், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, எம்&எம், அதானி போர்ட்ஸ், பிஎன்பி, பந்தன் வங்கி ஆகியவை பிற்பகல் வர்த்தகத்தில் அதிக நஷ்டம் அடைந்தன.
முதலீட்டாளர்களுக்கான மூன்று வருட லாக்-இன் காலம் இன்றுடன் முடிவடைந்ததால், யெஸ் வங்கி கிட்டத்தட்ட 13 சதவிகிதம் சரிந்து 5.15 சதவிகிதம் குறைந்து முடிந்தது.

இதற்கிடையில், இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் ஜோஷி நிறுவனத்தில் இணைந்தார் என்ற செய்தியால் டெக் மஹிந்திரா 6.84 சதவீதம் உயர்ந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sensex ends 897 pts below nifty 17154 level bank stocks worst performers tech mahindra shines

Exit mobile version