பலவீனமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் ஏற்ற இறக்கமான அமர்வில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் வீழ்ச்சியுற்றன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 62,410 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 18,560 ஆகவும் முடிவடைந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25% ஆக உயர்த்திய பிறகு சந்தைகள் ஏற்ற இறக்கமாக மாறின.
மற்ற சந்தைகளில், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.56% வரை சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 82.25 புள்ளிகள் வரை வீழ்ச்சியுற்று வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், பிபிசிஎல் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் லாபத்திலும் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை வீழ்ச்சியுற்று வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி நஷ்டத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் லாபத்திலும் வணிகமாகின.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/