இந்தியப் பங்குச் சந்தைகள், வியாழக்கிழமை (அக்.6) வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 156.63 (0.27%) உயர்ந்து 58,222.10 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 57.5 (0.33%) உயர்ந்து 17,331 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையிலும் இதே நிலை நீடித்தது. அதிகப்பட்சமாக ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி பங்குகள் நல்ல லாபம் பார்த்தன.
அந்த வகையில் ஆக்ஸிஸ் பங்குகள் 1.65 சதவீதமும், ஐ.சி.ஐ.சி,ஐ., வங்கி பங்குகள் 2.04 சதவீதமும், இன்ஃபோசிஸ் பங்குகள் 1.76 சதவீதமும், எஸ்.பி.ஐ.,பங்குகள் 0.85 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 2.27 சதவீதமும் லாபம் கண்டன.
எனினும் ஹெச்.டி.எஃப்.சி., வங்கி பங்குகள் 1.08 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கி 1.52 சதவீதமும், கோடக் மஹிந்திரா வங்கி 0.29 சதவீதம் நஷ்டத்தையும் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் லார்சன் அண்ட் டர்போ பங்குகள் 2.24 சதவீதம் வரை லாபம் கண்டன. அதாவது ரூ.41.95 வரை உயர்வு கண்டு ஒரு பங்கின் விலை ரூ.1913.40 ஆக காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“