புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் வரலாற்று சிறப்புமிக்க 80,000 புள்ளிகளை எட்டியது, அதே நேரத்தில் நிஃப்டியும் அதன் வாழ்நாள் அதிகபட்சத்தை எட்டியது.
ஆங்கிலத்தில் படிக்க:
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் (NSE) நிஃப்டி 50 ஆனது 0.7% உயர்ந்து 24,291.75 புள்ளிகளிலும், எஸ்&பி (S&P) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் (BSE) சென்செக்ஸ் 0.72% அதிகரித்து 80,013.77 புள்ளிகளிலும் இருந்தது. 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைத் தாண்டியது இதுவே முதல் முறை.
கடந்த வியாழன் அன்று சென்செக்ஸ் 79,000-ஐ கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள்ளே 80000 புள்ளிகளை கடந்துள்ளது.
நாட்டின் முதன்மையான தனியார் கடன் வழங்குநரான ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டது, இது ஒரு முக்கிய உலகளாவிய குறியீட்டில் அதன் வெயிட்டேஜ் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் சாதனை உச்சத்திற்குச் சென்றது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி திறந்த நிலையில் 3.5% உயர்ந்து, நிஃப்டி லாபத்தில் முன்னணியில் இருந்தது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியைத் தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை பின்தங்கியுள்ளன.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை நல்ல நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டன, ஷாங்காய் சந்தை நிலவரம் குறைவாக இருந்தது. செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.
செவ்வாயன்று ஒரு நிலையற்ற வர்த்தகத்தில் பி.எஸ்.இ பெஞ்ச்மார்க் 34.74 புள்ளிகள் அல்லது 0.04 சதவீதம் சரிந்து 79,441.45 ஆக இருந்தது. பகலில், இது 379.68 புள்ளிகள் அல்லது 0.47 சதவீதம் உயர்ந்து 79,855.87 என்ற சாதனை உச்சத்தை எட்டியது.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“