Advertisment

கனரா, ஐ.ஓ.பி வங்கி பங்குகள் உயர்வு; சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்வு

Share Market Today Live: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் உயர்ந்தன.

author-image
WebDesk
New Update
SensexNi.jpg

சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market Today: இந்திய முன்னணி பங்குச் சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை புதன்கிழமை (ஜூன் 5) உயர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. மதியம் வரை இரண்டு குறியீடுகளும் 2 சதவீதம் முன்னேறியது.

சென்செக்ஸ் 954.88 புள்ளிகள் அல்லது 1.32 சதவீதம் உயர்ந்து 73,033.90 ஆகவும், நிஃப்டி 243.80 புள்ளிகள் அல்லது 1.11 சதவீதம் உயர்ந்து 22128.30 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

இது சந்தை பங்கேற்பாளர்களிடையே அரசியல் பதற்றத்தைத் தணிக்கும் சமிக்ஞையாகும். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை ஏற்ற இறக்கத்திலிருந்து தடுக்கும் பொருட்டு நுகர்வு பங்குகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதனால் பொதுத்துறை பங்குகள் விற்பனைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மீண்டும் தொடங்கப்பட்டன. துறைசார் குறியீடுகளில், ஆட்டோ, ஐடி, பார்மா, எஃப்எம்சிஜி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.​​ பொதுத்துறை வங்கி, உலோகம், உள்கட்டமைப்பு, பிஎஸ்இ ஆகியவை அதிகம் சரிந்தன. எனினும் கனரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

அதானி குழுமத்தின் பசுமை ஆற்றல் பிரிவான அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 634.15 புள்ளிகள் அல்லது 1.63 சதவீதம் உயர்ந்து ஒவ்வொன்றும் 38,248.45 ஆக உள்ளது. பங்குகளின் விலை 1795.00 ஆகவும், நாளின் குறைந்தபட்சம் 1,545.15 ஆகவும் இருந்தது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Stock Market Today Live Updates: Sensex inches 2000 pts up as buying in consumption stocks boost

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment