இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (செப்.13) வர்த்தகத்தை கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் உயர்வுடன் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை 18 ஆயிரத்தை கடந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 456 புள்ளிகள் (0.8 சதவீதம்) உயர்ந்து 60,571 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் அதிக லாபம் பார்த்தன.
ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர். ரெட்டிஸ் லேப், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி சுசூகி, டிசிஎஸ் நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
இதில் டிசிஎஸ் பங்குகள் அதிகபட்சமாக 0.37 சதவீதம் (ரூ.11.9) வரை சரிவை கண்டது.
தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிப்ஃடி 133.70 (0.75 சதவீதம்) உயர்ந்து 18070.05 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் லாபத்தை சந்தித்தன.
ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், சிப்லா, கோல் இந்தியா நிறுவன லாபத்தில் சோபிக்கவில்லை. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 4.14 சதவீதம் வரை உயர்வை கண்டு விலை ரூ.1784.75 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil