Advertisment

கூடவும் இல்லை, இறங்கவும் இல்லை.. தப்பித்த ஆக்ஸிஸ் வங்கி பங்குகள்!

செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 274.12 புள்ளிகள் உயர்ந்தது.

author-image
WebDesk
New Update
Today Nifty and Sensex 18 January 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் ஜனவரி 18 2023

செவ்வாய்க்கிழமை (நவ.22) பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 274.12 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 84.25 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Advertisment

மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவன பங்குகள் லாபத்திலும், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, நெஸ்லே, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி நிறுவன பங்குகள் லாபம் பார்த்தன.

ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் கூடுதல், குறைவின்றி நேற்றைய விலையில் காணப்பட்டது. எனினும், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பிபிசிஎல், சிப்லா மற்றும் கோல் இந்தியா நிறுவன பங்குகள் நஷ்டம் பார்த்தன.

கடந்த 3 நாள்களாக இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சற்று உயர்வை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bombay Stock Exchange Sensex Nifty Nse Stock Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment