இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஜூலை 27) உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. எனினும் ஏர்டெல் நிறுவன பங்குகள் சோபிக்கவில்லை.
மும்பை பங்குச் சந்தையை பொருத்தவரை சென்செக்ஸ் குறியீட்டெண் 547.83 (0.99 சதவீதம்) உயர்ந்து 55816.32 என வர்த்தகம் ஆகின. நிஃப்டி 0.96 சதவீதம், அதாவது 157.95 புள்ளிகள் உயர்ந்து 16641.80 என வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மேலும், ஐடி மற்றும் நிதி நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. மும்பை பங்குச் சந்தையை பொருத்தவரை பேங்க் ஆஃப் இந்தியா, லார்சன் அண்ட் டர்போ, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இண்டஸ் வங்கி பங்குகள் நல்ல லாபத்தை பெற்றன.
எனினும் பார்தி ஏர்டெல், கோடக் மகேந்திரா வங்கி, என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ரீஸ் நஷ்டத்தில் வர்த்தகமாகின. ஏர்டெல் பங்குகள் ரூ.9.10 (1.33 சதவீதம்) குறைந்து ரூ.675 ஆக உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil