பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 4 சதவீதம் உயர்வு.. இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

இன்றைய வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 64.45 புள்ளிகளும் உயர்ந்தன.

இன்றைய வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 64.45 புள்ளிகளும் உயர்ந்தன.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113.95 (0.19 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து, 60,950.36 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 64.45 (0.36 சதவீதம்) உயர்வு கண்டு 18,117.15 என வணிகத்தை நிறைவு செய்தது.

Advertisment

தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பிரிட்டானியா, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், ஹிண்டால்கோ, இண்டஸ்இந்த் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், லார்சன் அண்ட் டர்போ, நெஸ்லே, மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ, டாடா கன்சியூமல் ப்ராடக்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகிந்திரா, டைடன் கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், யூபிஎல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் வணிகமாகின.

மறுபுறம் அப்பல்லோ எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பிபிசிஎல், சிப்லா, கோல் இந்தியா, திவிஷ் லேப், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஈஸர் மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, கோடாக் மகிந்திரா வங்கி, மாருதி கூசூகி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக், இண்டஸ்இந்த் வங்கி, கோடாக் மகிந்திரா வங்கி, லார்சன் அண்ட் டர்போ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, நெஸ்லே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகிந்திரா, டைடன் கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் பார்த்தன.

Advertisment
Advertisements

பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, மாருதி சுசூகி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப், சன் பார்மா நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.

பஜாஜ் ஃபின்சர்வ்
இன்றைய பங்கு வர்த்தகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் பி.எஸ்.இ.,யில் 4.55 சதவீதமும், என்.எஸ்.இ.,யில் 4.48 சதவீதமும் உயர்வு கண்டன.
அந்த வகையில், தேசிய பங்குச் சந்தையில் பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் ரூ.77.2 உயர்வு ரூ.1800.70 எனவும், மும்பை பங்குச் சந்தையில் ரூ.78.45 உயர்ந்து 1801.70 எனவும் காணப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nse Nifty Sensex Bombay Stock Exchange

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: