இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (மே 2) வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. சென்செக்ஸில் அதிகப்பட்சமாக டெக் மஹிந்திரா 2.92 சதவீதம் லாபம் ஈட்டி ஒரு பங்கின் விலை ரூ.1,053.65 என காணப்பட்டது.
உலகளாவிய குறிப்புகள் மற்றும் நிறுவனங்களின் 4ம் காலாண்டு முடிவுகளால் பங்கு வணிகம் இன்று உயர்ந்து காணப்பட்டது. ஆகையால், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 242.27 புள்ளிகள் அல்லது 0.40 சதவீதம் உயர்ந்து 61,354.71 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 82.65 புள்ளிகள் அல்லது 0.46 சதவீதம் உயர்ந்து 18,147.65 ஆகவும் முடிந்தது.
என்.டி.டி.வி. சரிவு
இதற்கிடையில் என்.டி.டி.வி. பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. தொடர்ந்து, NDTV 1.90 சதவிகிதம் குறைந்து, BSE இல் 185.85 ரூபாய்க்கு அமர்வை நிறைவு செய்தது.
மேலும், அதானி டோட்டல் கேஸ் இன்று 1.48 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.98 கோடியாக உள்ளது.
டெக் மஹிந்திரா உயர்வு
டெக் மஹிந்திரா இன்று சென்செக்ஸ் பேக்கில் அதிக லாபம் ஈட்டியது, ஏனெனில் பிஎஸ்இயில் பங்கு 2.92 சதவீதம் உயர்ந்து ரூ.1,053.65 ஆக இருந்தது.
இன்றைய அமர்வில் ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், என்டிபிசி, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதிக நஷ்டம்
இதற்கிடையில், ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமென்ட், கோட்டக் மஹிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக நஷ்டம் ஈட்டின.
எண்ணெய் பங்குகள்
தொடர்ந்து, துறை ரீதியாக, நிஃப்டி மெட்டல் 1.42 சதவீதமும், நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு 1.16 சதவீதமும், ஐடி குறியீடு 1.14 சதவீதமும் உயர்ந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“