Advertisment

2023 பட்ஜெட் தாக்கல்; சென்செக்ஸ் 1100 புள்ளிகள் உயர்வு

பிஎஸ்இ சென்செக்ஸ் 1186.21 புள்ளிகள் அல்லது 1.99% உயர்ந்து 60,736 ஆக இருந்தது.

author-image
WebDesk
New Update
Today Nifty and Sensex 10 April 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 10 ஏப்ரல் 2023

இந்திய பங்குச் சந்தை குயீடுகள் 1.5%க்கு மேல் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 60,750 புள்ளிகளைத் தாண்டியது.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 17,970க்கு மேல் வர்த்தகமானது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 1200 புள்ளிகள் அல்லது 3% உயர்ந்து 41,891 ஆக காணப்பட்டது. நிஃப்டி ஆட்டோ 0.78% உயர்ந்து, நிஃப்டி ஐடி 0.83%, நிஃப்டி மெட்டல் 0.78%, நிஃப்டி பார்மா 0.09%, நிஃப்டி ரியல்டி 0.09% உயர்ந்தன.

அந்த வகையில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 300 புள்ளிகள் அல்லது 1.68% உயர்ந்து 17,972.20 ஆக இருந்தது. இன்ட்ராடே அதிகபட்சமாக 17,972.20 ஆகவும், குறைந்தபட்சமாக 17,731.65 ஆகவும் காணப்பட்டது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
எச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.

பிஎஸ்இ சென்செக்ஸ் 1186.21 புள்ளிகள் அல்லது 1.99% உயர்ந்து 60,736 ஆக இருந்தது. இது 59,807.68 மற்றும் 60,773.44 வரம்பில் நகர்ந்தது.
ஐசிஐசிஐ வங்கி, லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட பங்குகளாக இருந்தன.
சன் பார்மா, டைட்டன் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை பின்தங்கின.

ஆசிய சந்தைகள் புதன்கிழமை உயர்வுடன் முடிவடைந்தன. சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 29.90 புள்ளிகள் உயர்ந்து 0.90% உயர்ந்து 3,284.92 காணப்பட்டது.
ஜப்பானின் Nikkei 225 19.77 புள்ளிகள் அல்லது 0.07% அதிகமாகவும் 27,346.88 ஆகவும், ஹாங்காங்கின் Hang Seng 1.29 59% அதிகமாகவும் 27,346.88 ஆகவும் இருந்தது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கம் 467 புள்ளிகள் அல்லது 0.82% அதிகரித்து 57,657.00 ஆக காணப்பட்டது.
மார்ச் டெலிவரிக்கான வெள்ளி 1033 புள்ளிகள் அல்லது 1.50% அதிகரித்து 69,862.00 ஆகவும் இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Nirmala Sitharaman Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment