வாரத்தின் முதல் நாள் வர்த்தக தினமான இன்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின. காலை முதலே மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் நேர்மறையாகவே வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தையை பொருத்தமட்டில் 760 புள்ளிகள் (1.41 சதவீதம்) உயர்ந்து 54,521 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் நிஃப்டி 229 புள்ளிகள் (1.43 சதவீதம்) உயர்ந்து 16,27ஆக இருந்தது. பங்குச் சந்தையை பொருத்தமட்டில் ஐடி மற்றும் வங்கி பங்குகள் லாபகரமாக வர்த்தகம் ஆகின.
மும்பை பங்குச் சந்தையை பொருத்தமட்டில் இன்போசிஸ் வங்கி, டெக்எம், இன்டஸ் வங்கி, கோடாக் மகிந்திரா வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் இயங்கின.
கடந்த வாரம் பங்கு சந்தைகள் பெருமளவு ஆட்டம் கண்டன. கரடியின் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கள்கிழமை முதல் நான்காம் நாள் வியாழக்கிழமை வரை பங்குச் சந்தைகளில் எதிர்மறையான வர்த்தகமே நிகழ்ந்தது.
புதன்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 372 புள்ளிகள் இழந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 92 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது.
ஊ;நாட்டு பெரு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வருவாக இருந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. இதற்கு கச்சா எண்ணெய் வீழ்ச்சி ஒரு மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.