உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மையான சமிக்ஞைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஜூலை20) ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.
வலுவான அமெரிக்க பெருநிறுவனங்களின் வருவாய், ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாய் விநியோகம் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை அமெரிக்க பணவீக்கம் மற்றும் வட்டிவீதம் உயர்வு குறித்து கவலைப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சற்று ஓய்வை அளித்தன.
கடந்த காலங்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளிவிடும் என்றும் முதலீட்டாளர்கள் அஞ்சினார்கள். இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் இன்று தொடக்க அமர்வில் சென்செக்ஸ் குறியீட்டெண் 672 புள்ளிகள் (1.23 சதவீதம்) வரை உயர்ந்து 55,439 ஆகவும், தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் நிஃப்டி 166 (1.01 சதவீதம்) உயரந்து 16,506-ஐ கடந்து வர்த்தகம் ஆகிவருகிறது.
அதேபோல் நிஃப்டி மிட்கேப் 100 (0.59 சதவீதம்) மற்றும் ஸ்மால் கேப் 0.97 சதவீதம் உயர்ந்ததால் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் வலுவான குறிப்பில் வர்த்தகம் ஆகிவருகின்றன.
மேலும் தேசிய பங்குச் சந்தையின் துணை குறியீடுகளான நிஃப்டி ஐடி, நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி ஆயில் அண்ட் கேஸ் ஆகியவை முறையே 1.10 சதவீதம், 1.21 சதவீதம் மற்றும் 1.94 சதவீதம் என உயர்ந்து காணப்படுகின்றன.