இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 346 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 17,100 என வர்த்தகத்தை நிறைவு செய்தது. இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட், டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிகப்பட்ச சரிவை பதிவு செய்தன.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் யூ.பி.எல்., பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், சிப்லா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின.
நாளை விடுமுறை
ராம நவமி தினம் என்பதால் பங்குச் சந்தைகளுக்கு நாளை (மார்ச் 30) விடுமுறை ஆகும். அடுத்து ஏப்.1 மற்றும் ஏப்.4 (மகாவீரர் ஜெயந்தி), ஏப்ரல் 7 (புனித வெள்ளி), ஏப்.14 அம்பேத்கர் ஜெயந்தி உள்ளிட்ட நாள்களும் விடுமுறை ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“