இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (மே 25) வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 51.95 புள்ளிகள் அல்லது 0.28% உயர்ந்து 18,337.35 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 98.84 புள்ளிகள் அல்லது 0.16% அதிகரித்து 61,872.62 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 43,681.40-ல் நிறைவடைந்தது. நிஃப்டி எஃப்எம்சிஜி 0.61%, நிஃப்டி மெட்டல் 0.30%, நிஃப்டி ரியாலிட்டி 1.12% உயர்ந்து காணப்பட்டது.
எனினும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.45% சரிந்து காணப்பட்டது. நிஃப்டி 50 இல் பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசஸ், பார்தி ஏர்டெல், ஐடிசி மற்றும் டிவிஸ் லேப் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
விப்ரோ, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, யுபிஎல் மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை நஷ்டமடைந்தன.
வங்கி நிஃப்டி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பந்தன் பேங்க், கோடக் பேங்க், ஏயூ பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவை இந்த குறியீட்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், இண்டஸ்இந்த் வங்கி, பெடரல் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“