பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தபால் அலுவலக வைப்புத்தொகை மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களின் முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த முக்கியமான காலக்கெடுவை தவறவிட்டால் அவர்களின் சிறு சேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும். PPF, SSY, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு PAN மற்றும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் 31 மார்ச் 2023 அன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சிறு சேமிப்பு சந்தாதாரர்கள் பிபிஎஃப், எஸ்எஸ்ஒய், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் அல்லது வேறு ஏதேனும் சிறு சேமிப்புக் கணக்கைத் திறக்கும்போது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு செப். 29ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை பதிவு செய்யாத பட்சத்தில், கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருவரின் சிறுசேமிப்பு கணக்கு முடக்கப்படும். ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு, கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சிறு சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை வழங்கத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் அவர்களது கணக்கு முடக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“