ஆன்லைனில் தங்க பத்திர திட்டத்துக்கு விண்ணப்பிங்க - அட்டகாச தள்ளுபடி பெறுங்க
SGB யில் உங்கள் முதலீட்டில், அரசாங்கமும் ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி விகிதத்தை செலுத்தும், இது அரை ஆண்டுக்கு செலுத்தப்படும். சம்பாதித்த வட்டிக்கு வரி விதிக்கப்படும். பத்திரங்களை எந்தவொரு கடனுக்கும் இணை பாதுகாப்பாக (collateral security) பயன்படுத்தப்படலாம்.
sgb gold bond price, sgb gold, sgb scheme, sgb bond, sovereign gold bond scheme 2020-21 dates, price, how to apply, where to buy,sgb gold bond news, sgb gold bond news in tamil, sgb gold bond latest news, sgb gold bond ltest news in tamil
SGB Gold Bond Price: Sovereign Gold Bond Scheme 2020-21-Series I ன் முதல் பகுதி ஏப்ரல் 20, 2020 முதல் ஏப்ரல் 24, 2020 வரையிலான காலத்திற்கான சந்தாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. SGB ஒரு கிராம் தங்கத்துக்கான விலை ரூபாய் 4,639/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு டிஜிட்டல் முறைகளிலும் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 50/- தள்ளுபடியுடன் ரூபாய் 4,589/- என்று கிடைக்கும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17, 2020 வரையிலான சந்தா காலத்திற்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வணிக நாட்களில் 999 அளவு தூய்மையான தங்கத்திற்கான எளிய சராசரி இறுதி விலையின் அடிப்படையில் SGB வழங்குவதற்கான விலையை அரசாங்கம் நிர்ணயிக்கிறது. தங்கத்தின் இத்தகைய விலைகள் India Bullion and Jewellers Association (IBJA) ஆல் வெளியிடப்படுகின்றன.
SGB வைத்திருக்கும் காலம் 8 ஆண்டுகள், இருப்பினும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே வெளியேறு அனுமதிக்கப்படுகிறது. முதிர்ச்சியில் அல்லது முன்கூட்டிய மீட்பில் (premature redemption), IBJA விலையின் அடிப்படையில் விலை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும். அடுத்த வட்டி செலுத்த வேண்டிய தேதியில், அத்தகைய பத்திரத்தை வெளியிட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரங்களை முன்கூட்டியே மீட்பது அனுமதிக்கப்படுகிறது. முதிர்ச்சியடைந்த மீட்பிற்கான கோரிக்கை அடுத்த வட்டி செலுத்தும் தேதிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எப்படி SGB ல் முதலீடு செய்வது
வணிக வங்கிகள் (Scheduled Commercial Banks), நியமிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள், Stock Holding Corporation of India Ltd (SHCIL) மற்றும் National Stock Exchange of India, Bombay Stock Exchange போன்ற அங்கீகரிக்கப்பட்ட stock exchanges பத்திரத்துக்கான விண்ணப்பங்களைப் பெற அங்கீகரிக்கப்பட்டவை. ஒருவர் குறைந்தது ஒரு கிராம் முதல் அதிகப்பட்சமாக 4 கிலோ தங்கம் வரை வருடத்துக்கு பல்வேறு தவனைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
SGB யில் உங்கள் முதலீட்டில், அரசாங்கமும் ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி விகிதத்தை செலுத்தும், இது அரை ஆண்டுக்கு செலுத்தப்படும். சம்பாதித்த வட்டிக்கு வரி விதிக்கப்படும். பத்திரங்களை எந்தவொரு கடனுக்கும் இணை பாதுகாப்பாக (collateral security) பயன்படுத்தப்படலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil