ரெப்போ வட்டி 50 பிபிஎஸ் அதிகரிப்பு.. கவர்னர் சக்தி கந்த தாஸ் தகவல்
RBI MPC meeting: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் கூட்டம். இன்று (செப்.30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய முடிவுகளை வெளியிட்டார்.
தொடர்ந்து ரெப்போ வட்டி வீதம் 50 பிபிஎஸ் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் சக்தி கந்த தாஸ் கூறுகையில், “ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.9 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
கடந்த 5 மாதங்களில், ரெப்போ விகிதம் 190 bps அதிகரித்துள்ளது. முன்னதாக ஏப்ரலில் 4% ஆக இருந்தது, தற்போது 5.90% ஆக உயர்ந்து உள்ளது” என்றார்.
மேலும், SDF விகிதம் 5.65% ஆக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
தொடர்ந்து, பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்று தாஸ் மேலும் கூறினார். புவிசார் அரசியல் சூழ்நிலைகள் தேவை-வழங்கல் சூழ்நிலையை பாதித்தன.
உலகளாவிய மத்திய வங்கிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தின. இந்தப் பின்னணியில், இந்தியப் பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை கண்டது. கரோனா தொற்றுநோய், ரஷ்யா-உக்ரைன் மோதலின் அதிர்ச்சிகளை இந்தியாவும் தாங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய பொருட்களின் விலையில் சமீபத்திய திருத்தம் நீடித்தால், வரும் மாதங்களில் செலவு பாதிப்புகளைக் குறைக்கலாம் என்றும் தாஸ் கூறினார்.
இந்திய பணயவியல் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், முன்னதாக சந்தை முடிவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடந்த நாள்களில் பங்குச் சந்தைகள் ஆயிரம் புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil