இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் இன்றைய (டிச.23) அமர்வை முடித்தன, தொடர்ந்து நான்காவது நாளாக இழப்புகளை நீடித்தன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 980 புள்ளிகள் சரிந்து 59,845.29 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50, 300 புள்ளிகள் சரிந்து 17,800க்கு மேல் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தன
அனைத்து துறை குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 3.3% இழந்தது. ஸ்மால்கேப் குறியீடு கிட்டத்தட்ட 4% சரிந்தது.
இதற்கிடையில், இந்தியா VIX இன் வால்டிலிட்டி கேஜ் 6.40% அதிகரித்தது. வங்கி பங்குகள் 6.06% சரிவைச் சந்தித்தன, அதே நேரத்தில் நிஃப்டி மீடியா மற்றும் நிஃப்டி மெட்டல் தலா 4% வரை சரிந்தன.
நிஃப்டி நிலவரம்
நிஃப்டி 50 குறியீடு வர்த்தகத்தில் சிப்லா, டிவிஸ் லேப் மற்றும் டைட்டன் ஆகிய மூன்று நிறுவன பங்குகள் மட்டுமே லாபங்களை கண்டன.
மறுபுறம், 47 பங்குகள் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன, நாளின் அதிக நஷ்டமான அதானி போர்ட்ஸ் 7% குறைந்து முடிந்தது. அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை அன்றைய நாளில் அதிக நஷ்டத்தை சந்தித்தன.
சென்செக்ஸ்
காலை வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்து 60000க்கு கீழே வர்த்தகமானது. 30 பங்குகளும் சரிந்து காணப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/