உலகளாவிய சந்தை குறிப்புகள் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை (மார்ச் 27) வர்த்தகத்தை சிறிய லாபத்தில் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்து, 57,653 ஆக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 16,985 ஆக காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, சன் பார்மா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், கோடாக் மஹிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
இதற்கிடையில் பெரும்பாலும் ஆசிய சந்தைகள் நஷ்டத்தில் வணிகத்தை நிறைவு செய்தன. சியோல், ஷாங்காய், ஹாங்ஹாங் சந்தைகள் சரிவை கண்டன.
எனினும் ஜப்பான் சந்தை உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இன்றைய வர்த்தகத்தில் பவர் கிரிட், ஆக்ஸிஸ் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் பெரியளவில் சரிவை சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“