Advertisment

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; மீடியா, மெட்டல் பங்குகள் உயர்வு

Tata Elxsi பங்குகள் கிட்டத்தட்ட 1% உயர்ந்து Rs8,725.55 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வாக வர்த்தகம் செய்யப்பட்டு 1.4% உயர்ந்து ரூ.811 ஆக இருந்தது.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

NSE நிஃப்டி 50 24.85 புள்ளிகள் அல்லது 0.1% குறைந்து 21,519 ஆக இருந்தது. 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 49.94 புள்ளிகள் அல்லது 0.1% குறைந்து 71,337.30 ஆக இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 73.85 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 21,618.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 271.50 புள்ளிகள் அல்லது 0.38% அதிகரித்து 71,657.71 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

லார்ஜ்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகள் வழிவகுத்த லாபத்துடன், பரந்த குறியீடுகள் உயர்வில் காணப்பட்டன. பேங்க் நிஃப்டி குறியீடு 118.20 புள்ளிகள் அல்லது 0.25% உயர்ந்து 47,360.85-ல் முடிந்தது.
மீடியா மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. சிப்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

மறுபுறம், ஓ.என்.ஜி.சி., திவியின் லேபரட்டரீஸ், என்.டி.பி.சி., பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பவர் கிரிட் ஆகியவை பின்தங்கின.
டாடா எல்ஸி (Tata Elxsi) பங்குகள் கிட்டத்தட்ட 1% உயர்ந்து Rs8,725.55 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வாக வர்த்தகம் செய்யப்பட்டு 1.4% உயர்ந்து ரூ.811 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (ஜன.10,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.41% உயர்ந்து 71,679.67 ஆக முடிந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment