Advertisment

ஆட்டம் கண்ட ஆட்டோ பங்குகள்; சிக்ஸர் அடித்த ஜி மீடியா!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (பிப்.20,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.39% உயர்ந்து 22,209.20 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.53% உயர்ந்து 73,093.54 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 74.70 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 22,196.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 350 புள்ளிகள் அல்லது 0.48% அதிகரித்து 73,057.40 ஆகவும் காணப்பட்டது.
பரந்த குறியீடுகள் உயர்வில் நிறைவாகின. லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் அதிக லாபம் பெற்றன. பேங்க் நிஃப்டி குறியீடு 558.70 புள்ளிகள் அல்லது 1.20% அதிகரித்து 47,094.20 ஆக நிலைத்தது.

Advertisment

பங்குகள் நிலவரம்

பவர் கிரிட் கார்ப், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், கோல் இந்தியா மற்றும் ஐச்சர் மோட்டார் ஆகியவை பின்தங்கின.

ஜி (ZEE) என்டர்டெயின்மென்ட் 15% உயர்ந்தது

ஜி (Zee) என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் பங்கு 15% உயர்ந்து ரூ 205.25 ஆக இருந்தது. ஜனவரி 22 அன்று நிறுத்தப்பட்ட $10 பில்லியன் இணைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்க சோனியுடன் நிறுவனம் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக செய்தி அறிக்கைகள் வெளியான நிலையில் இந்த உயர்வு வந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment