New Update
/
Share Market News Today | Sensex | Nifty | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (ஜன.25,2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 101.35 புள்ளிகள் அல்லது 0.47% இழந்து 21,352.60 புள்ளிகளில் நிலைத்தது. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 359.64 புள்ளிகள் அல்லது 0.51% குறைந்து 70,700.67 புள்ளிகளில் முடிவடைந்தது.
துறைசார் குறியீடு நிஃப்டி வங்கி 216.25 புள்ளிகள் அல்லது 0.48% இழந்து 44,866.15 புள்ளிகளில் நிலைத்தன. துறைகளில், ஐடி மற்றும் பார்மா பங்குகள் குறியீடுகளை கீழே இழுத்தன. மிட்கேப் பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்ததால், பரந்த குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.
டெக் மஹிந்திரா பங்குகள்
டெக் மஹிந்திரா பங்குகள் 6.8% சரிந்து ரூ.1,312.05 ஆக இருந்தது.
பங்குகள் நிலவரம்
பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, கோல் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
டெக் மஹிந்திரா, சிப்லா, எஸ்பிஐ லை இன்சூரன்ஸ், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எல்டிஐஎம்டிட்ரீ ஆகியவை நிஃப்டி 50 இல் முதன்மையாக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.