Advertisment

தாக்கலான இடைக்கால பட்ஜெட்: மீடியா, மெட்டல் பங்குகள் கடும் சரிவு

Share Market News Today | Sensex | Nifty | Share Prices| இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (பிப்.1,2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தது.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.17% குறைந்து 21,688.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.19% குறைந்து 71,616.75 ஆகவும் நிறைவடைந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices| இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 28.25 புள்ளிகள் அல்லது 0.13% குறைந்து 21,697.45 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 106.81 புள்ளிகள் அல்லது 0.15% இழந்து 71,645.30 ஆகவும் முடிந்தது.
பரந்த குறியீடுகள் சரிவில் மூடப்பட்டன, மிட்கேப் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 191.85 புள்ளிகள் அல்லது 0.42% அதிகரித்து 46,188.65 ஆக நிலைத்தது.

Advertisment

அல்ட்ரா டெக் பங்குகள் சரிவு

அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 2.6% சரிந்து ரூ.9,900.05 ஆக இருந்தது. நிஃப்டி 50 இல் பங்குகள் முக்கிய நஷ்டத்தை சந்தித்தன.

இன்றைய அதிக லாப, நஷ்ட பங்குகள்

மாருதி சுசூகி (Maruti Suzuki), சிப்லா (Cipla), பவர் கிரிட் (Power Grid), எஸ்பிஐ ஃலைப் இன்சூரன்ஸ் (SBI Life Insurance) மற்றும் ஹெச்டிஎஃப்சி ஃலைப் (HDFC Life) ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபறம், டாக்டர் ரெட்டி, எல்&டி, அல்ட்ராடெக் சிமென்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீலேண்ட் யுபிஎல் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.

இடைக்கால பட்ஜெட்

நரேந்திர மோடி அரசின் 2வது இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment