சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு; வங்கிப் பங்குகள் அபாரம்

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.30% உயர்ந்து 21,783.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.24% உயர்ந்து 71,601.54 ஆகவும் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.30% உயர்ந்து 21,783.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.24% உயர்ந்து 71,601.54 ஆகவும் நிறைவடைந்தது.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

இந்தியப் பங்குச்சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 64.55 புள்ளிகள் அல்லது 0.30% உயர்ந்து 21,782.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 167.06 புள்ளிகள் அல்லது 0.23% அதிகரித்து 71,595.49 ஆகவும் முடிந்தது.
பரந்த குறியீடுகள் சிவப்பு நிறத்தில் மூடப்பட்டன. ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 622.55 புள்ளிகள் அல்லது 1.38% அதிகரித்து 45,634.55 புள்ளிகளில் நிலைத்தது.

Advertisment

பங்குகள் நிலவரம்

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை இன்று நிஃப்டி-50 இல் முக்கிய முன்னணி பங்குகளாக இருந்தன.
எம்&எம், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை நிஃப்டி 50-ல் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன.

பேடிஎம் (Paytm) பங்குகள் சரிவு

பேடிஎம் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன்ஸ் (One97 Communication) இன் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக 8% சரிந்து ரூ.410 ஆக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment
Advertisements
Share Market

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: