New Update
/
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் மார்ச் 22, 2024 அன்று உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 84.80 புள்ளிகள் அல்லது 0.39% உயர்ந்து 22,096.75 இல் நிலைத்தது. அதே நேரத்தில், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 190.75 புள்ளிகள் அல்லது 0.26% முன்னேறி 72,832 இல் முடிந்தது.
நிஃப்டி மிட்கேப் 100 கிட்டத்தட்ட 300 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து 47,312.85 இல் நிறைவடைந்தது.
பங்குகள் நிலவரம்
மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப், யுபிஎல், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
எல்டிஐ மைண்ட் ட்ரீ (LTIMindtree), இன்ஃபோசிஸ் (Infosys), விப்ரோ (Wipro), ஹெச்.சி.எல் (HCL) டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.