New Update
/
share-market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய (பிப்.6,2024) உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 157.70 புள்ளிகள் அல்லது 0.72% உயர்ந்து 21,929.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 454.67 புள்ளிகள் அல்லது 0.63% அதிகரித்து 72,186.09 ஆகவும் காணப்பட்டது.
பரந்த குறியீடுகள் உயர்வில் காணப்பட்டன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மிகவும் உயர்ந்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 134.75 புள்ளிகள் அல்லது 0.29% இழந்து 45,690.80 இல் நிலைத்தது.
52 வார உயர்வை எட்டிய பங்குகள்
பிடிசி இண்டஸ்ட்ரீஸ் 8.85%, துருவ் கன்சல்டன்சி 8.42%, நிதின் ஸ்பின்னர்ஸ் 8.35%, பெட்ரோநெட் பிஎன்ஜி 7.19%, ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் 7.10% அதிகரித்தது.
அதிகப்பட்ச உயர்வு, நஷ்ட பங்குகள்
நிஃப்டி 50ல் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், மாருதி சுஸுகி, டிசிஎஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
பவர் கிரிட் கார்ப்பரேஷன், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா மற்றும் ஐடிசி ஆகியவை நிஃப்டி 50 இல் முக்கிய பின்தங்கிய நிலையில் காணப்படடன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.