Share Market Highlights: இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை (அக்.5) வர்த்தக அமர்வை நேர்மறையாக முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.56% அதிகரித்து 19,545.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 405.53 புள்ளிகள் அதிகரித்து 65,631.57 ஆகவும் காணப்பட்டது.
பரந்த குறியீடுகள் ஸ்மால்கேப் பங்குகள் தலைமையிலான லாபத்துடன் நிலைபெற்றன, அதே நேரத்தில் மிட்கேப் பங்குகள் ஓரளவு சரிந்தன.
வங்கி நிஃப்டி குறியீடு 249.30 புள்ளிகள் அல்லது 0.57% அதிகரித்து 44,213.35 ஆக இருந்தது. மற்ற துறை சார்ந்த குறியீடுகளில், மீடியா, ஆட்டோ மற்றும் ஐடி பங்குகள் ஏற்றம் பெற்றன. எனினும், பொதுத்துறை வங்கி, பார்மா, உலோகம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் சரிந்தன.
சிறந்த ஆக்டிவ் பங்குகள்
இன்ட்ரா-டே வர்த்தகத்தின் போது ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி, சோமோட்டோ (Zomato), பி.என்.எம் மற்றும் ஆர்ஐஎல் சுசிலான் (Suzlon) ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் (NSE) இல் மிகவும் சுறுசுறுப்பான பங்குகளாக இருந்தன.
சரிந்த பங்குகள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, என்டிபிசி, டிவிஸ் லேப்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை வியாழக்கிழமை இன்ரா-டே வர்த்தகத்தின் போது என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக நஷ்டமடைந்தன.
உயர்ந்த பங்குகள்
டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகியவை இன்ட்ராடே வர்த்தகத்தின் போது என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
ஐ.டி. பங்குகள்
இன்ட்ரா டே வர்த்தகத்தின் போது நிஃப்டி ஐடி குறியீடு 1.48% உயர்ந்தது. டிசிஎஸ் 2% ஆதாயத்துடன் முன்னணியில் இருந்தது, இன்ஃபோசிஸ், எம்பாசிஸ், எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ், கோஃபோர்ஜ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை தலா 1% அதிகரித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“