Advertisment

வங்கி நிஃப்டி புதிய உச்சம்; 1% உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்கள்கிழமை (ஏப்.29,2024) வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 1% அதிகரித்து 22,643.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 1.28% உயர்ந்து 74,671.28 ஆகவும் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (ஏப்.29,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நேர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 233.44 புள்ளிகள் அல்லது 1% அதிகரித்து 22,643.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 941.12 புள்ளிகள் அல்லது 1.28% உயர்ந்து 74,671.28 ஆகவும் இருந்தது.

Advertisment

லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் லாபத்துடன், பரந்த குறியீடுகள் நேர்மறையாக முடிந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 1186.80 புள்ளிகள் அல்லது 2.46% உயர்ந்து 49,387.85-ல் முடிந்தது.
வங்கி மற்றும் நிதிச் சேவைப் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன, அதே நேரத்தில் ரியாலிட்டி மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குகள் நிலவரம்

யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை பேங்க் நிஃப்டி குறியீட்டில் அதிக அளவு லாபம் ஈட்டின.

வங்கி நிஃப்டி புதிய உச்சம்

ஐசிஐசிஐ வங்கி, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றால் பேங்க் நிஃப்டி இன்டெக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து அதன் புதிய அனைத்து கால உயர்வான 49,216.30 ஆக காணப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment