Share Market News Today | Sensex, Nifty : இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 ஆகியவை திங்களன்று சரிவில் நிறைவுற்றன.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வாரத்தின் முதல் வர்த்தகத்தை சரிவில் நிறைவுசெய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.10% சரிந்து 19,731.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் குறைந்து 66,166.93 ஆகவும் முடிந்தது.
பொதுத்துறை வங்கி பங்குகள்
பரந்த குறியீடுகளில், நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 200 ஓரளவு சரிவைக் கண்டன. அதே நேரத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் லாபத்தைச் சேர்த்தன.
பேங்க் நிஃப்டி குறியீடு 62.05 புள்ளிகள் அல்லது 0.14% குறைந்து 44,225.90 ஆக காணப்பட்டது. மற்ற துறை குறியீடுகளில், பார்மா, மீடியா, எஃப்எம்சிஜி, ரியாலிட்டி மற்றும் ஹெல்த்கேர் குறியீடுகள் சரிவில் நிறைவு செய்தன.
அதே நேரத்தில் உலோகம், பொதுத்துறை வங்கி மற்றும் ஆட்டோ பங்குகள் லாபம் சேர்த்தன.
ஆக்டிவ் பங்குகள்
டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), எம்எம்டிசி (MMTC) மற்றும் உரங்கள் & கெமிக்கல்ஸ் திருவாங்கூர் ஆகியவை இன்ட்ரா-டே வர்த்தகத்தின் போது தேசிய பங்குச் சந்தையில் மிகவும் செயலில் உள்ள பங்குகளாக காணப்பட்டன.
ஃபெடரல் வங்கி இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை
ஃபெடரல் வங்கி திங்களன்று செப்டம்பர் 2023 இல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 1,000.16 கோடி லாபம் ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 740.91 கோடியுடன் ஒப்பிடுகையில் 35% அதிகமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“