New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
NSE நிஃப்டி 50 0.10% அதிகரித்து 20,926.35 ஆகவும், BSE சென்செக்ஸ் 0.05% உயர்ந்து 69,584.60 ஆகவும் இருந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை புதன்கிழமை உயர்வில் முடிவடைந்தன.
NSE நிஃப்டி 50 0.10% அதிகரித்து 20,926.35 ஆகவும், BSE சென்செக்ஸ் 0.05% உயர்ந்து 69,584.60 ஆகவும் இருந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (டிச.13) வர்த்தக அமர்வை நேர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 19.95 புள்ளிகள் அல்லது 0.10% அதிகரித்து 20,926.35 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 33.57 புள்ளிகள் அல்லது 0.05% உயர்ந்து 69,584.60 ஆகவும் காணப்பட்டது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் லாபத்துடன் பரந்த குறியீடுகள் உயர்ந்து காணப்பட்டன. பேங்க் நிஃப்டி குறியீட்டு எண் 5.30 புள்ளிகள் அல்லது 0.01% சரிந்து 47,092.25 ஆக முடிந்தது.
ஹெல்த்கேர் மற்றும் பார்மா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன, அதே நேரத்தில் ஐடி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
என்.டி.பி.சி (NTPC), அதானி போர்ட் அண்ட் எஸ்இஇசட் (Adani Ports and SEZ), ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (Power Grid Cooperation) மற்றும் ஐச்சர் மோட்டார்ஸ் ( Eicher Motors) ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் (Infosys), ஹெச்டிஎஃப்சி ஃலைப் இன்சூரன்ஸ் (HDFC Life Insurance), ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் (Ultra Tech Cement) ஆகியவை பின்தங்கின. இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 5.09% குறைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.