New Update
/
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26,2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 92.05 புள்ளிகள் அல்லது 0.42% சரிந்து 22,004.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 361.64 புள்ளிகள் அல்லது 0.50% குறைந்து 72,470.30 ஆகவும் காணப்பட்டது.
லார்ஜ் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் வீழ்ச்சியுடன், பரந்த குறியீடுகள் கலப்பு மண்டலத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீட்டு எண் 263.55 புள்ளிகள் அல்லது 0.56% குறைந்து 46,600.20 ஆக முடிந்தது.
மீடியா மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சியடைந்த நிலையிலும், மற்ற துறைசார் குறியீடுகளில் ரியாலிட்டி மற்றும் மெட்டல் பங்குகள் சிறப்பாக செயல்பட்டன.
பங்குகள் நிவவரம்
பஜாஜ் ஃபைனான்ஸ், பிரிட்டானியா, ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டின.
பவர் கிரிட், ஐச்சர் மோட்டார்ஸ், விப்ரோ, டிவிஸ் லேபரேட்டரீஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை நிஃப்டி-50 இல் அதிக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.