Advertisment

பின்தங்கிய நெஸ்லே, டைட்டன், பஜாஜ்: 360 புள்ளிகள் எழும்பிய சென்செக்ஸ்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று உயர்வில் முடிவடைந்தன.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.61% அதிகரித்து 22,462.00 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.49% உயர்ந்து 74,014.55 ஆகவும் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (ஏப்.1,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 135.10 புள்ளிகள் அல்லது 0.61% அதிகரித்து 22,462.00 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 363.20 புள்ளிகள் அல்லது 0.49% உயர்ந்து 74,014.55 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

லார்ஜ்-கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளின் லாபத்துடன், பரந்த குறியீடுகள் உயர்வில் முடிந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 453.65 புள்ளிகள் அல்லது 0.96% உயர்ந்து 47,578.25-ல் முடிந்தது.

மீடியா மற்றும் ரியாலிட்டி பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் எஃப்எம்சிஜி மற்றும் ஆட்டோ பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குகள் நிலவரம்

ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஸ்டீக், டாடா ஸ்டீல், டிவிஸ் லேப், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.இசட் (SEZ) ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டின.

மறுபுறம், ஐஷர் மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஆட்டோ, எல்டிஐ மைண்ட்ட்ரீ, நெஸ்லே இந்தியா ஆகியவை பின்தங்கியவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment