Advertisment

சென்செக்ஸ் 72 ஆயிரத்தை கடந்தது; புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் ச்ந்தைகள் வியாழக்கிழமை (பிப்.15,2024) அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 72,100 ஆகவும், நிஃப்டி 21,910.75 ஆகவும் காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.32% உயர்ந்து 21,910.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.32% 72,050.39 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (பிப்.15,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 70.70 புள்ளிகள் அல்லது 0.32% உயர்ந்து 21,910.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 227.56 புள்ளிகள் அல்லது 0.32% 72,050.39 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள் லாபத்துடன் பரந்த குறியீடுகளும் லாபத்தில் முடிந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 310.60 புள்ளிகள் அல்லது 0.68% உயர்ந்து 46,218.90-ல் முடிந்தது. பொதுத்துறை வங்கி பங்குகள் மற்றும் எரிசக்தி பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் எஃப்.எம்.சி.ஜி (FMCG) மற்றும் மீடியா பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

நிஃப்டி 50 இல் எம்&எம், பவர் கிரிட், பிபிசிஎல், ஓஎன்ஜிசி மற்றும் என்டிபிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதேநேரம், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை பின்தங்கின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment