Advertisment

22 ஆயிரத்தை கடந்த நிஃப்டி: ரிலைன்ஸ் பங்குகள் இழப்பு

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 ஆகியவை வெள்ளிக்கிழமை (பிப்.16) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.59% அதிகரித்து 22,040.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.52% உயர்ந்து 72,426.64 ஆகவும் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை (பிப்.16,2024) வர்த்தக அமர்வை நேர்மறையாக நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 129.95 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து 22,040.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 376.25 புள்ளிகள் அல்லது 0.52% உயர்ந்து 72,426.64 ஆகவும் இருந்தது.

பரந்த குறியீடுகள் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் ஆதாயத்துடன் நேர்மறையாக முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 165.95 புள்ளிகள் அல்லது 0.36% உயர்ந்து 46,384.85-ல் முடிந்தது.

பொதுத்துறை (PSU) வங்கிகள் மற்றும் எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்த போது ஆட்டோ மற்றும் பார்மா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன.

டாப் பங்குகள் உயர்வு, சரிவு நிலவரம்

நிஃப்டி 50 இல் எம்&எம், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, விப்ரோ மற்றும் மாருதி சுசுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன. பவர் கிரிட், பிரிட்டானியா, அப்பல்லோ மருத்துவமனை, ஆக்சிஸ் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் முக்கிய நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment